• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

40 லோடு சாணியைக் காணவில்லை என புகார் அளித்த அதிகாரிகள்

March 11, 2019 தண்டோரா குழு

வடிவேலு படத்தில் கிணத்தை கானோம்னு வரும் காமெடி போல கர்நாடகா மாநிலத்தில் 1.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான சாணி திருட்டு போயிருப்பதாக கால்நடைத் துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பிரூர் மாவட்டத்தில் கால்நடைத் துறைக்குச் சொந்தமான ரூ.1.25 லட்சம் மதிப்பு பசுமாட்டுச் சாணி திருட்டு போயிருக்கிறது. இது குறித்து கால்நடைத் துறை அதிகாரிகள் பிரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

25 முதல் 40 லோடு அளவுக்கு சாண வரட்டி திருடப்பட்டிருக்கிறது என அதிகாரிகள் தங்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இதனை விவசாயிகள் பூச்சிவிரட்டியாகவும் பயன்படுத்துவார்கள் மற்றும் தோட்டப் பராமரிப்புக்கு பெரிதும் பயன்படுகிறது. இதையடுத்து பிரூர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அதிகாரிகள் யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறதாகவும் மாயமான சாண வரட்டி விரைவில் கைப்பற்றப்பட்டு சம்பந்தப்பட்ட துறை வசம் ஒப்படைக்கப்படும் எனவும் பிரூர் காவல் நிலையா இன்ஸ்பெக்டர் சத்யநாராயண சாமி உறுதி அளித்துள்ளார்.

மேலும் படிக்க