• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

4 – வது ஆண்டாக ‘பென் டூ பப்ளிஷ்’ போட்டி அமேசான் அறிவித்தது

December 2, 2020 தண்டோரா குழு

குறு வடிவு மற்றும் நீள் வடிவு எழுத்தாளர்களுக்கான ‘பென் டூ பப்ளிஷ்’ என்னும் போட்டியை அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

நான்காவது ஆண்டாக அமேசான் நிறுவனம் தனது இ-பப்ளிஷிங் இணையதளமான கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங் மூலம் இந்த போட்டியை நடத்த உள்ளது. ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் சுயமாக புத்தகங்களை வெளியிடுவோரின் எழுத்து திறனை அங்கீகரிக்கும் விதமாக இந்த போட்டி நடைபெற உள்ளது. விருப்பமுள்ள போட்டியாளர்கள் தங்களின் புதிய, இதுவரை வெளிவராத புத்தகங்களை 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வார்த்தைகளில் குறுகிய வடிவத்திலும் 10 ஆயிரத்திற்கு மேல் உள்ள வார்த்தைகளை நீண்ட உரை நடையிலும் கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங் இணையதளத்தில் வெளியிடலாம்.

அந்த புத்தகங்களின் தன்மை, படைப்பாற்றல், எழுத்து தரம் மற்றும் வாடிக்கையாளர் கருத்து உள்ளிட்ட பல அளவுகோல்களின் அடிப்படையில் படைப்புகள் தேர்வு செய்யப்படும். இந்த ஆண்டிற்கான நடுவர் குழுவில் தமிழுக்கு சாரு நிவேதிதா, சி. சரவணகார்த்திகேயன், ஆங்கிலத்திற்கு துர்ஜோய் தத்தா, ஆனந்த் நீலகண்டன் மற்றும் இந்திக்கு அனு சிங் மற்றும்திவ்ய பிரகாஷ் துபே உள்ளிட்ட புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். ஒவ்வொரு மொழியிலும் குறுகிய மற்றும் நீண்ட உரை நடைக்கான போட்டிகள் நடைபெறும். இந்த 2 பிரிவுகளிலும் ஒவ்வொரு மொழியிலும் தலா 5 பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் இருந்து முதல் 3 பரிசுக்கான வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நீண்ட உரை நடை பிரிவில் ஒவ்வொரு மொழியிலும் முதலிடத்தை பிடிப்பவர்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும். மேலும் அந்த புத்தகத்தை வெஸ்ட்லேண்ட் பப்ளிகேஷன்ஸ் மூலம் வெளியிடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும். இந்த பிரிவில் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு தலா 1 லட்சம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இதேபோல் குறுகிய உரைநடை பிரிவில் முதலிடம் பிடிப்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

இதில் வெற்றி பெறும் எழுத்தாளர்களுக்கு குழு வழிகாட்டுதலையும் அவர்களின் வென்ற புத்தகங்களை சந்தைப்படுத்தும் உதவியையும் அமேசான்.இன் வழங்கும் விருப்பமுள்ள பங்கேற்பாளர்கள் தங்கள் புத்தகத்தை அமேசான்.இனில் சுயமாக வெளியிட kdp.amazon.com என்ற இணையதளத்தை 10 டிசம்பர் 2020 முதல் 10 மார்ச் 2021 வரை பதிப்பிக்கலாம். பின்னர் அவர்கள் தங்கள் புத்தகத்தை கேடிபி-யின் KDP Select பதிவுசெய்யலாம். மேலும் புத்தகத்தின் தகவல்களில் பென்டூபப்ளிஷ்4 என்ற குறிச்சொல்சேர்க்கவேண்டும். போட்டிக்கான அனைத்து மின்னணு புத்தகங்களையும் ஐபோன், ஐபாட், ஆன்ட்ராய்ட் போன்களில் கிண்டில் இலவசச்செயலியிலும் டேப், பர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டர்களில் கிண்டில்இ-ரீடர்ஸ் மூலமும் படிக்கலாம். மேலும் விவரங்களுக்கு எழுத்தாளர்கள் www.amazon.in/pentopublish என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மேலும் படிக்க