• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

4 மாடிக்கு அனுமதி வாங்கிவிட்டு 8 மாடி கட்டிய சென்னை சில்க்ஸ்- அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன்

June 1, 2017 தண்டோரா குழு

சென்னை சில்க்ஸ் நிறுவனம் நான்கு மாடி கட்டிடத்துக்கு அனுமதி வாங்கிவிட்டு எட்டு மாடி கட்டியது என்று தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடம் நேற்று தீ விபத்தில் சிக்கியது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படைவீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக போராடியும் அவர்களால் தீயை முழுவதுமாக அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் தீ விபத்து குறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது;

” சென்னை தி. நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் தொடர்பான வழக்குகள் 20 வருடங்களாக நீதிமன்றத்தில் உள்ளன. 2011-ம் ஆண்டு சென்னையில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

சென்னை சில்க்ஸ் நிறுவனம் 4 மாடி கட்ட மட்டுமே சிஎம்டிஏ அனுமதி வழங்கியது. ஆனால் 4 மாடி கட்ட அனுமதி வாங்கிவிட்டு தரைத்தளம் உட்பட 8 மாடி கட்டியது. இது சம்பந்தமாக சென்னை சில்க்ஸுக்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னை சில்க்ஸின் 5,6,7 மாடிகளை இடிப்பதற்கு சென்னை சில்க்ஸ் நீதிமன்றத்தில் தடை வாங்கியது. கட்டுமான பணிமுடிப்புச் சான்றிதழலையும் சென்னை சில்க்ஸ் நிறுவனம் இது வரை அரசுக்கு அளிக்கவில்லை.

தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க