• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான்கு பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி – தமிழக முதலமைச்சர்

June 2, 2017 தண்டோரா குழு

கோவை காட்டு யானை தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் நேற்று இரவு போத்தனூர் அருகே கணேஷபுரம் பகுதியில் ஒற்றை காட்டு யானை நுழைந்தது. அது வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த விஜயகுமார் மற்றும் அவரின் மகள் காயத்ரியை (12) கடுமையாக தாக்கியது. இதில் சிறுமி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதன் பின் வெள்ளலூர் பகுதிக்குள் நுழைந்த அந்த யானை நாகரத்தினம், ஜோதிமணி ஆகிய இரு பெண்களை தாக்கி கொன்றது. அதே போல்தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச வந்த பழனிசாமி என்பவரையும் அந்த யானை தாக்கியது.அதில் அவர் அங்கேயே உயிரிழந்துவிட்டார்.

இச்சம்பவத்தில் இறந்த நான்கு பேரின் குடும்பத்திற்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறியுள்ளார். மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார். வனத்துறையினர் மூலம் இந்த நிதியுதவி உடனே அவர்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க