September 15, 2017
தண்டோரா குழு
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 109வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
பேரறிஞர் அண்ணாவின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.