November 11, 2017
தண்டோரா குழு
பாட்னாவில் சுமார் இரண்டரை மணிநேரத்தில் 3௦௦ வழக்குகளுக்கு தீர்ப்பளித்து பாட்னா உயர்நீதிமன்றம் சாதனை படைத்துள்ளது.
பீகார் மாநிலத்தின் பாட்னா உயர்நீதிமன்றம், கடந்த ஏழரை மாதங்களில் சுமார் 63,070 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதிக்குள், சுமார் 62,061 வழக்குகளுக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நீதிபதி ரவிரஞ்சன் ஜாமீன் தொடர்பான சுமார் 300 வழக்குகளுக்கு இரண்டரை மணிநேரத்தில் தீர்ப்பளித்துள்ளர். மேலும்,இந்த வழக்குகளுக்கு வாதாடும் வழக்கறிஞர்கள் வராததால், 11 வழக்குகள் மட்டுமே தீர்ப்பு வழங்காத நிலையில் உள்ளது.
கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி, சுமார் 1266 வழக்குகளுக்கும், செப்டம்பர் 21ம் தேதி 1056 வழக்குகளுக்கும், அக்டோபர் மாதம் 17ம் தேதி, 1189 வழக்குகளுக்கும் மற்றும் நவம்பர் மாதம் 9ம் தேதி 1489 வழக்குகளுக்கும் பாட்னா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.