• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

25 நாடுகளை சுற்றி வரும் விழிப்புணர்வு வாகனம் கோவையில் இருந்து புறப்பட்டது

July 29, 2019 தண்டோரா குழு

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு உலக புலிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் கோவை சிஎம்எஸ் கல்லூரி சார்பில் 25 நாடுகளை சுற்றி வரும் விழிப்புணர்வு வாகனம் அக்கல்லூரியில் இருந்து புறப்பட்டுள்ளது.

சர்வதேச புலிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இந்த நிலையில் உலகளவில் குறைந்து வரும் புலிகளின் எண்ணிக்கையை பெருக்க சர்வதேச அளவில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் அமைந்துள்ள சி எம் எஸ் கல்லூரி மற்றும் உலக புலிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது WTF மற்றும் உலகளவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையான 4000 என்பதை வலியுறுத்தும் விதமாக WTF 4000 என்ற வரைபடம் போன்று மாணவ மாணவிகள் புலிகளின் முகமூடி அணிந்து அணிவகுத்து நின்றனர்.

இதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த கௌதம் மேனன் மற்றும் பால் ஆகியோர் புலிகள் பாதுகாப்பை வலியுறுத்தி கார் மூலம் தங்கள் பயணத்தை துவக்கினர்.கல்லூரி மைதானத்தில் அதற்கான பயணத்தை ஏற்கனவே கார் மூலம் உலகை சுற்றி வந்த கோவையை சேர்ந்த மீனாட்சி என்ற பெண் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த பயணமானது கோவையில் துவங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் வழியாக சீனா,தாய்லாந்து,கிர்கிஸ்தான்,கஜகஸ்தான்,ரஷ்யா,ஹங்கேரி,,ஜெர்மன்,இத்தாலி என சுமார் 24 நாடுகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு பிரான்சில் முடிவடைகிறது.

65 நாள் பயணமாக திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணத்தில் சுமார் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொள்வதாக உலக புலிகள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். இதேபோல் புலிகளை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் கைகோர்க்க வேண்டும் என இதில் பங்கேற்ற மாணவ மாணவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க