August 13, 2025
தண்டோரா குழு
இந்தியாவில் அதன் 25வது ஆண்டுவிழாவையும், உலகளவில் 130 ஆண்டு விழாவையும் கொண்டாடும் வகையில், ஸ்கோடா ஆட்டோ இந்தியா அதன் அதிகம் விற்பனையாகும் மாடல்களான குஷாக், ஸ்லாவியா மற்றும் கைலாக் ஆகியவற்றின் லிமிடெட் எடிஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
எக்ஸ்க்ளூசிவ் லிமிடெட் எடிஷன் மாடல்கள் தனித்துவமான வடிவமைப்பு மேம்பாடுகள், உயர்தர அம்சங்கள் மற்றும் 25வது ஆண்டுவிழா பேட்ஜ் ஆகியவற்றுடன் வருகின்றன.இது சிறப்பான மைல்கல் எட்டப்பட்டதையும் இந்திய மார்க்கெட்டுக்கான பிராண்டின் நீடித்த அர்ப்பணிப்பையும் காட்டுகிறது.
லிமிடெட் எடிஷன்கள், குஷாக் மற்றும் ஸ்லாவியா விற்கான மோன்டி கார்லோ மற்றும் கைலாக் ஆகியவற்றுக்கான பிரெஸ்டிஜ் மற்றும் சிக்னேச்சர் + போன்ற ஹை-ஸ்பெக் டிரிம்களை அடிப்படையாகக் கொண்டவை.
பிராண்டின் 25வது ஆண்டுவிழா மற்றும் புதிய லிமிடெட் எடிஷன் மாடல்களின் அறிமுகம் குறித்துப் பேசிய ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் ஆஷிஷ் குப்தா,
“கைலாக், குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகியவற்றின் லிமிடெட் எடிஷன்களுடன் இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ வின் அற்புதமான 25வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம்.. இந்த ஸ்பெஷல் எடிஷன்கள் எங்கள் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டவை, ஸ்போர்ட்டி ஸ்டைலை பிரீமியம் அம்சங்களுடன் கலப்பது, இலவச ஆக்சசரி கிட் மற்றும் ஓட்டும் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும் ஸ்மார்ட் புதுமைகள். எங்கள் பயணத்தின் முக்கிய பகுதியாக இருந்த ஆர்வமுள்ள சமூகத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இது அமைந்துள்ளது,
மேலும் எங்கள் வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகள் மற்றும் ரசனைகளுக்கு ஏற்ற தயாரிப்புகளை வழங்குவதற்கான எங்கள் வலுவான அர்ப்பணிப்பை இது காட்டுகிறது.
குஷாக் ஆனிவர்சரி எடிஷன் 1.0டிஎஸ்ஐ எம்டி மாடல் ரூ.16,39,000 (எக்ஸ்ஷோரூம்) விலையிலும்,குஷாக் ஆனிவர்சரி எடிஷன் 1.0 டிஎஸ்ஐ ஏடி மாடல் ரூ.17,49,000 (எக்ஸ்-ஷோரூம்)விலையிலும்,குஷாக் ஆனிவர்சரி எடிஷன் 1.5 டிஎஸ்ஐ டிஎஸ்ஜி மாடல் ரூ.19,09,000(எக்ஸ்-ஷோரூம்) விலையிலும்,ஸ்லாவியா ஆனிவர்சரி எடிஷன் 1.01 டிஎஸ்ஐ எம்டி மாடல் ரூ.15,63,000 (எக்ஸ்-ஷோரூம்) விலையிலும், ஸ்லாவியா ஆனிவர்சரி எடிஷன் 1.0 டிஎஸ்ஐ ஏடி மாடல் ரூ.16,73,000 (எக்ஸ்-ஷோரூம்) விலையிலும்,ஸ்லாவியா ஆனிவர்சரி எடிஷன்1.5 டிஎஸ்ஐ டிஎஸ்ஜி மாடல் ரூ.18,33,000 விலையிலும், கைலாக் ஆனிவர்சரி எடிஷன் பிரெஸ்டிஜ் மற்றும் சிக்னேச்சர் + 1.0 டிஎஸ்ஐ எம்டி மாடல் ரூ.11,25,000 & 12,89,000 விலைகளிலும் கிடைக்கும்.