• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தே.மு.தி.க-வின் பொருளாளராக நியமிக்கப்பட்டார் பிரேமலதா விஜயகாந்த் !

October 19, 2018 தண்டோரா குழு

தேமுதிக.,வின் பொருளாளராக விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா தேர்வு செய்யபட்டுள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சி தொடங்கியது முதல் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தாலும் கட்சியில் எந்த பொறுப்பும் வகிக்காமல் இருந்து வந்தார்.இதற்கிடையில் விஜயகாந்தின் தற்போதைய உடல் நிலையை கருத்தில் கொண்டு பிரேமலாதா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,

“எதிர்பாராத வகையில்,பொருளாளராக என்னை விஜயகாந்த் அறிவித்துவிட்டார்.தீபாவளி போனஸ்போல் எனக்கு பொருளாளர் பதவி கொடுத்துள்ளதாக தொண்டர்கள் கூறினர் கட்சியின் பொருளாளர் பதவியை விஜயகாந்த் எனக்கு கொடுத்தார் இந்த பதவி எனக்கு கொடுக்கப்போகிறார் என்பது என்னை உட்பட யாருக்குமே தெரியாது.என்னை வாழ்த்திய கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.விஜயகாந்திடம் இருந்து பாராட்டு,பதவியை பெறுவது எளிதல்ல.

உண்மை,உழைப்பு இருந்தால் தான் தேமுதிகவில் வளர்ச்சி இருக்கும்.வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமையும்.இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும்.எந்த மதத்தின் நம்பிக்கையையும் மதிக்க வேண்டும்.மதத்தின் பேரலேயே இங்கு மக்கள் பிளவுப்படுத்தப்படுகிறார்கள்.

குடும்ப உறுப்பினர்கள் கட்சிக்கு வருவதை அந்த கட்சியின் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற வேண்டும்.நல்ல ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். உள்ளாட்சி,இடைத்தேர்தல் அறிவிக்க முடியாத நிலையில் ஆளுங்கட்சி உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா ஆட்சியே சரியாக இல்லாத போது சட்ட மன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி ஆட்சி மட்டும் எப்படி நல்ல ஆட்சியாக இருக்கும்.இனி வரும் காலங்களில் தேமுதிக தொடர்ச்சியாக கட்சி பணியாற்றும்”.இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க