• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

March 22, 2019 தண்டோரா குழு

கோவையில் 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோவை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அகமது கபீர் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி அவர்களிடம் மனு அளித்தனர். அம்மனுவில், கடந்த 1997 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு,கைது செய்யப்பட்ட நிலையிலுள்ள சாகுல்ஹமீது 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார் எனவும், பல முறை சிறை கைதிகள் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் பல பேரை விடுவித்த அரசு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய அனைத்து தகுதிகள் இருந்தும், விடுதலை செய்யாமல் சிறையில் வைத்திருப்பது வேதனை அளிக்கிறது என்றும், இது சம்பந்தமாக 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வழக்கு சம்பந்தமாக நீதியரசர் செல்வம் அவர்கள் இவர்களை ஏன் இன்னும் விடுதலை செய்யாமல் தாமதப்படுத்துகிறார் என அரசு வழக்கறிஞரிடம் கேள்விகளைத் தொடுத்தார் ?

ஆனால் அதற்கு சரியான காரணத்தை அரசு வழக்கறிஞர் அளிக்காததால் உடனடியாக தமிழக அரசு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக, விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. ஆனால் உத்தரவு பிறப்பித்து, இரண்டு மாதங்களாகியும் இன்னும் இவர்கள் விடுதலை விஷயமாக தமிழக அரசு எந்த ஒரு வித, நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதலால் மாவட்ட ஆட்சியரிடம் மனு மூலமாக, தலைமைச் செயலகத்தில் செயல்படும் உள்துறை செயலாளருக்கு மனு அளித்துள்ளனர். என்றும், மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 11 நபர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நீதியரசர் உத்தரவிட்டுள்ள நிலையில் யாரையும் இதுவரை விடுதலை செய்யவில்லை என்றும், இதில் 8 நபர்கள் கோவையைச் சேர்ந்தவர்கள் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இவர்களை வெளியில் விடாமல் காலதாமதம் ஏற்படுவதை மாவட்ட ஆட்சியாளர் கவனத்திற்கு எடுத்துச் செல்ல இந்த மனு அளிக்கப்பட்டதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க