• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

22 வருடங்களுக்குப் பிறகு திருமணம் நடைபெற்ற கிராமம்!

May 7, 2018 தண்டோரா குழு

ராஜஸ்தான் மாநிலத்தில் 22 வருடம் கழித்து திருமணம் நடந்து உள்ளது.ராஜஸ்தான் மாநிலம் டோலபூர் மாவட்டம் ராஜ்காட் என்ற கிராமத்தில் 350க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இங்கு மின்சாரம், குடிநீர், சாலை, பள்ளிகள் என எந்த ஒரு அடிப்படை வசதிகள் கூட இல்லாத காரணத்தினால் டோலபூர் கிராம ஆண்களுக்கு பெண் தர மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இதன் விளைவாக ராஜ்காட் கிராமத்தில் உள்ள ஆண்களுக்கு பல ஆண்டுகளாக திருமணம் செய்யாத சூழல் ஏற்பட்டு 22 ஆண்டுகளாக அந்த கிராமத்தில் திருமண நிகழ்ச்சிகள் எதுவம் நடைபெறாமலேயே இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் 22 வருடங்களாக திருமணம் நடைபெறாமல் இருத்த ராஜ்காட் கிராமத்தில் பிறந்து வளந்த அஸ்வினி பராசர் என்ற இளைஞன் ராஜஸ்தானில் உள்ள சவாய்மேன் சிங்க் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.அவர் தனது கிராமத்தின் நிலைமை குறித்து சமுகவலைதலங்களின் முலம் வெளியுலகிற்கு கொண்டு வந்தார். அதுமட்டுமின்றி ராஜ்காட் கிராமத்துக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தரக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதனையடுத்து தற்போது அந்த கிராமத்தில் நிலைமை சீராகி வருகிறது.
இந்நிலையில், ராஜ்காட் கிராமத்தில் பவன்குமார் என்ற இளைஞருக்கு திருமணமாகியுள்ளது.மத்திய பிரதேசத்தில் இருந்து இவருக்கு மணப்பெண் கிடைத்துள்ளது. இது ராஜ்காட் கிராமத்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் திருமண நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க