• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துபாயில் சர்வதேச திருக்குர்ஆன் போட்டிகள் தொடக்கம்

June 2, 2017 தண்டோரா குழு

துபாயில் புனித ரமலான் மாதத்தில் வழக்கமாக நடைபெறும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருதின் 21-ஆம் ஆண்டு நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை மாலை தொடங்குகிறது.

பாரசீக வளைகுடா அரபு நாடுகளிருந்து 2௦௦௦ சிறுவர் சிறுமிகள் சர்வதேச குரான் போட்டியில் கலந்துக்கொள்கின்றனர். கத்தார் நாட்டின் தலைநகரான டோஹாவில் ஒரு மசூதியில் சிறுவர்களுக்கான குரான் போட்டி நடைபெறுகிறது. டோஹா குரானிய மையத்தில் சிறுமிகளுக்கான போட்டி நடைபெறுகிறது.

குரானை மனப்பாடம் செய்யும் வெவ்வேறு பிரிவுகளில் அவர்கள் போட்டியிடுகின்றனர். 3௦ குரான் வல்லுனர்கள் அந்த போட்டிக்கு நீதிபதியாக விளங்குவர்.

அந்த போட்டியை ஏற்பாடு செய்யும் குழுவின் உறுப்பினர், சுல்தான் அல் பதர் கூறுகையில்,

“ரமலான் மாதத்தின் முதல் வாரத்தில் இந்த போட்டி நடைபெறும். குரானை படிப்பதற்கும், அதை மனப்பாடம் செய்வதற்கும், குரானை குறித்து அவர்களுடைய திறமையை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பது தான் இந்த போட்டியின் குறிக்கோள் ஆகும்” என்று கூறினார்.

ரமலான் மாதத்தில், குரான் போட்டி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் முஸ்லிம் நாடுகளிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய சமூகங்களிலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க