• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

21 பெண் பிள்ளைகளை தத்தெடுத்த விளையாட்டு வீரர்

June 2, 2017 தண்டோரா குழு

முன்னாள் ஹாக்கி விளையாட்டு வீரர் அஜித் பால் நந்தால் 6ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை படிக்கும் 21 பெண் பிள்ளைகளை தத்தெடுத்துள்ளார்.

அரியானா மாநிலத்தின் ரோதக்கைச்சேர்ந்த முன்னாள் ஹாக்கி வீரர் அஜித் பால் நந்தால்.தற்போது அவர் நவீன பயிற்சிக் கூடம் ஒன்றை நடத்தி வருகிறார்.இவர் தற்போது அந்த கிராமத்தைச்சேர்ந்த 21 பெண் பிள்ளைகளை தத்தெடுத்துள்ளார்

இது குறித்து பால் நந்தால் கூறுகையில்,

“பெண் பிள்ளைகளின் விளையாட்டிற்கு தேவையான பயிற்சி அளித்து, அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் விளையாட்டு போட்டிக்கு கட்ட வேண்டிய கட்டணம் அனைத்தையும் நான் பொறுபேற்றுக் கொள்கிறேன்.மேலும் அவர்கள் அரசு பள்ளியிலிருந்து 12ம் வகுப்பு முடிக்கும் வரை, அவர்களுடைய கல்விக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறேன். விளையாட்டிl ஆர்வம் கொண்ட மாணவிகள் என்னுடைய பயிற்சிக் கூடத்தில் இலவசமாக பயிற்சி பெறலாம்.

கிரிகெட் விளையாட்டு வீரர் கௌதம் கம்பீர், சத்திஸ்கர் மாநிலத்தில் உயிரிழந்த சிஆர்பிஏப் வீரரின் குழந்தைகளின் பள்ளி படிப்பிக்கு பொறுப்பேற்றது, எனக்கு ஊக்கமளித்தது. திறமை நிறைந்த பெண்களை தத்தெடுத்து அவர்களை விளையாட்டு துறையில் ஊக்குவிக்க ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற சாக்ஷி மாலிக்கின் உறவினர்களுடன் பேசியுள்ளேன்” என்று கூறினார்.

இந்த தத்தெடுப்பு விழாவில் விருந்தினராக கலந்துக்கொண்ட எஸ்பி பங்கஜ் நெய்ன் கூறுகையில்,

“பெண்கள் அனைத்து அம்சங்களிலும் ஆண்களை விட பத்து மடங்கு திறன் கொண்டவர்கள். மக்கள் அவர்களுடைய திறமையை கண்டறிந்து, அவர்களை சரியான திசையில் வழிநடத்த வேண்டும்” என்று கூறினார்.

மேலும் படிக்க