• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

21 தொகுதிகளை பார்த்து கொள்வேன் என்று கூறிய வேலுமணியை அவர் தொகுதியிலேயே முடக்க வைத்துள்ளோம் அதுதாண்டா திமுக – ஸ்டாலின் !

April 1, 2021 தண்டோரா குழு

கொங்கு மண்டலம் தான் அதிமுகவின் கோட்டை என முதலமைச்சர் பழனிசாமியும் அதிமுகவும் சொல்லி கொண்டு இருக்கும் நிலையில் அந்த கோட்டையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஓட்டை போட்டு விட்டது என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைய இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அனைத்துக் கட்சித்தலைவர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் இன்று கோவை மாவட்டம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக கோவை துடியலூர் பகுதியில் கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, சிங்காநல்லூர் மற்றும் கோவை தெற்கு ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடக்கூடிய திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய மு க ஸ்டாலின்,

நான் ரெடி நீங்க ரெடியா என பொதுமக்களை பார்த்து கேள்வி எழுப்பினார். போட்டியிடக்கூடிய வேட்பாளர்களுக்கு எல்லாம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் உறுதியா நிச்சயமா சத்தியமா உதயசூரியனுக்கு ஓட்டு போடுவீர்களா எனவும் பொதுமக்களிடம் கேட்டார்.கொங்கு மண்டலம் தான் அதிமுகவின் கோட்டை என முதலமைச்சர் பழனிசாமியும் அதிமுக வும் சொல்லி கொண்டு இருப்பதாகவும் அந்த கோட்டையில் நாடாளுமண்ற தேர்தலில் திமுக ஓட்டை போட்டு விட்ட நிலையில் தற்போது வாஷ் அவுட் பன்ன போகிறோம் என்றும் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி, தங்கமணி ,வேலுமணி, செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன் போன்ற கொங்கு மண்டலத்தில் பலம் வாய்ந்த அமைச்சர்களாக உள்ளவர்கள் கொங்கு மண்டலத்திற்கு ஏதும் செய்யாமல் சுயநலத்தில் கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அவர்கள் சாதனையாகத் உள்ளதுஎன்றும் குற்றம் சாட்டினார்.
அமைச்சர் வேலுமணி,அவரது தம்பி மற்றும் பினாமிகளை வைத்து கொள்ளையடித்து கொண்டிருக்கிறார் என்றும் இந்த நம்பிக்கை துரோகிகளுக்கு மற்ற தொகுதிகளை விட மேற்கு மண்டலம் தான் தக்க தண்டனை தர வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.ஆட்சியின் கொடுமையை விட இந்த வெயிலின் கொடுமை பரவாயில்லை என மக்கள் நிற்பதாகவும் தனது தலைமையில் அமையும் ஆட்சியில் மேற்கு மண்டலத்தில் அதிக கவனம் செலுத்தி அதிக பணிகளை செய்வேன் என்றார்.

மேலும் அமைச்சராக உள்ள வேலுமணி 21 தொகுதிகளை பார்த்து கொள்வேன் என்று கூறிவிட்டு தற்போது அவர் தொகுதியிலேயே முடக்க வைத்துள்ளோம். அதுதாண்டா திமுக என்றும் கூறினார். ஏற்கனவே அமைச்சர்களின் ஊழல்களை பட்டியல் போட்டு ஆளுநரிடம் கொடுத்துள்ள சூழலில் ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரோ இல்லையோ நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று கூறிய ஸ்டாலின் அமைச்சர்களிலேயே அதிகம் கொள்ளை அடித்தவர் வேலுமணி தான் என்றும் சுண்ணாம்பு ஊழல், எல் ஈ டி பல்பில் ஊழல் ,சாக்கடை தூர் வாரியதில் ஊழல், காப்பர் ஒயர் ஊழல் ,கோவை மாநகராட்சி அலுவலகம் சென்னை மாநகராட்சியில் ஊழல், கிராம பஞ்சாயத்துகளில் ஊழல் ஸ்மார்ட் சிட்டி ஊழல், அவரது சகோதரர் அன்பரசு தொடர்பான ஊழல், அவரது பினாமி சந்திரசேகர் மீதான ஊழல், குப்பை அள்ளும் வண்டி கொள்முதல் ஊழல், சென்னை குடிநீர் வடிகால் வாரிய ஊழல், வேலை நியமன ஊழல் ,எம் சாண்ட் பயன்படுத்துதலில் ஊழல், என நீண்ட பட்டியலிட்டதுடன் ஒவ்வொரு அமைச்சரையும் எடுத்துப் பார்த்தால் எவ்வளவு வழக்குகள் போடுவது என்று தனக்கே பயமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாராபுரத்தில் பிரதமர் மோடி தவறான செய்திகளை சொல்லிச் சென்ற நிலையில் நேற்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவையில் பிரச்சாரம் செய்த போது கடைகளை அடித்து உடைத்து சென்றுள்ளதாகவும் ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பது போல பாஜக புகுந்த நாடும் உருப்படாது என்றும் விமர்சித்தார். நாட்டிலேயே உத்தரபிரதேசத்தில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அயிகம் நடப்பதாக மத்திய அரசின் புள்ள விவரங்கள் கூறும் போது திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று யோகி ஆதித்யநாத் கூறி சென்றுள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.பிரதமர் மோடி வலது பக்கம்ஓ பி எஸ் மற்றும் இடது பக்கம் இபிஎஸ் எனும் இரு ஊழல்களை உட்கார வைத்துக்கொண்டு ஊழலை பற்றி பேசுவாரா எனவும் நீட் தேர்வை எதிர்த்து தீர்மானம் போட்டதுடன் அதனை தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டுள்ள அதிமுக் நாளை பிரதமரின் அருகில் உட்கார்ந்திருக்கும் போது நீட் குறித்து கேட்பார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் ஊர்ந்து போய் கேளுங்கள், சசிகலா காலில் ஊர்ந்து போய் கேட்க தெரியும் போது பிரதமரிடம் கேளுங்கள் என்றும் விமர்சித்ததுடன் ஒரு மானக்கெட்ட ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.தொடர்ந்து தமிழகத்தில் திமுக செயல்படுத்த உள்ள திட்டங்களை பட்டியலிட்டதுடன் கோவை மாவட்டத்துக்கான பல்வேறு வாக்குறுதிகளையும் அவர் வாசித்தார்.

மேலும் படிக்க