• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு-தமிழக அரசு

May 30, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் அனைத்து அரசு பணியிடங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து அரசு பணியிடங்களிலும் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளது.இந்த 3 சதவீத இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்தி முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த இடஒதுக்கீட்டில் இவற்றில் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடும்,அறிவுசார் குறை உள்ளவர்களுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடும், கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு 1 சதவிகித இடஒதுக்கீடும் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசின் உதவிபெறும் அமைப்புகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க