• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமானங்களிலும் மடிக்கணினி எடுத்து செல்ல தடை

May 30, 2017 தண்டோரா குழு

உலக நாடுகளிலிருந்து அமெரிக்க சென்று திரும்பும் அனைத்து விமானங்களிலும் மடிக்கணினி எடுத்து செல்ல விரைவில் தடை செய்யப்படவுள்ளது.

அமெரிக்க நாடு முழுவதிலும் இயங்கி வரும் அனைத்து விமான நிலையங்களில், உலக நாடுகளிலிருந்து இருந்து வரும் விமானங்களில் மடிக்கணினியை கொண்டு செல்ல விரைவில் தடை விதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு செயலாளர், ஜான் கெல்லி தெரிவித்துள்ளர்.
மேலும், அமெரிக்க நாடு மக்கள் நிறைந்துள்ள விமானத்தை தகர்ப்பதில் தீவிரவாதிகள் தீவிரமாக இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மடிக்கணினி, டேபிலேட் ஆகியவற்றை, பயணிகள் விமானத்தில் எடுத்து செல்ல கூடாது. ஸ்மார்ட் போன் ஆகியவற்றை விட பெரிய அளவிலிருக்கும் அனைத்து மின்னணு பொருட்களும் விமான நிலையதில் சோதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால், புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் தேதி குறித்த எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், துருக்கி, ஆகியவற்றின் 1௦ விமான நிலையங்களில் இருந்து மடிக்கணினி எடுத்து வரக்கூடாது என்று கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்க தடைவித்தது. தற்போது. பல நாடுகளில் நவீன ரக அச்சுறுத்தல் இருப்பதால், இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க