• Download mobile app
13 Jun 2026, SaturdayEdition - 3776
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2025-26 நிதி ஆண்டிற்கு ரூ.2,530 கோடி போனஸ்: ஆக்சிஸ் மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் சாதனை!

June 9, 2026 தண்டோரா குழு

முன்னர் ‘மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ்’ என்று அழைக்கப்பட்ட ஆக்சிஸ் மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் 2025-26 நிதி ஆண்டிற்காக தகுதிவாய்ந்த பாலிசிதாரர்களுக்கு ரூ.2,530 கோடி போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்நிறுவனம் 24-வது ஆண்டாக போனஸ் அறிவித்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், கடந்த 24 ஆண்டுகளில் இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய மொத்த போனஸ் தொகை ரூ.18,377 கோடி ஆகும்.இந்த போனஸ் தொகை, வரும் ஜூலை 2026 முதல் 21 லட்சத்திற்கும் அதிகமான தகுதிவாய்ந்த பாலிசிதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

ஆக்சிஸ் மேக்ஸ் லைப் நிறுவனத்தின் ‘பிஏஆர்’ நிதி, கடந்த நிதியாண்டில் ரூ.74,119 கோடியாக இருந்த நிலையில், தற்போது 2025-26 நிதியாண்டில் ரூ.79,003 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் நிதி வளர்ச்சி 17% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளின் போனஸ் விவரம்:

கடந்த 5 ஆண்டுகளாக நிறுவனம் வழங்கிய போனஸ் தொகையை ஒப்பிடுகையில், 2021-22 நிதியாண்டில் ரூ.1,469 கோடியும், 2022-23 நிதியாண்டில் ரூ.1,604 கோடியும், 2023-24 நிதியாண்டில் ரூ.1,826 கோடியும், 2024-25 நிதியாண்டில் ரூ.2,135 கோடியும் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 2025-26 நிதியாண்டில் இது ரூ.2,530 கோடியாக உயர்ந்துள்ளது.

ஆக்சிஸ் மேக்ஸ் லைப் காப்பீட்டுத் திட்டங்கள் ரொக்க போனஸ், ரிவர்ஷனரி போனஸ் மற்றும் டெர்மினல் போனஸ் உள்ளிட்ட பல வகையான போனஸ்களை வழங்குகின்றன.மேலும், வாடிக்கையாளர்களின் அடிப்படை காப்பீட்டுத் தொகையை பாதிக்காமல், போனஸைச் சேமித்து வைப்பது, சேமித்த போனஸிலிருந்து ஒரு பகுதியைத் திரும்பப் பெறுவது போன்ற பல்வேறு சிறப்பம்சங்களையும் இந்நிறுவனம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க