• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

20 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தாமல் திருவாரூருக்கு மட்டும் தேர்தல் ஏன் – கி.வீரமணி

January 1, 2019 தண்டோரா குழு

20 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் திருவாரூருக்கு தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்த அவசரம் காட்டுவது ஏன் திராவிட கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான 2016 சட்டபேரவை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டிட்டு வெற்றிபெற்றார். இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ம் தேதி தேர்தல் நடக்கிறது.

இது குறித்து திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில்,

20 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளன என்று தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தல் ஆணையத்துக்கு எழுதி சில மாதங்கள் – பல வாரங்கள் ஆகிவிட்டன. பாதிக்கப்பட்டவர்களில் எவரும் உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு ஏதும் செய்யவும் இல்லை. இந்நிலையில் 20 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தாமல் திருவாரூருக்கு மட்டும் 2018 ஆகஸ்ட் கருணாநிதி மறைவால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதில் மட்டும் தனித்த அக்கறை காட்டுவதன் நோக்கம் தான் என்ன?

திருவாரூர் இடைத் தேர்தல் 2019 ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று டிசம்பர் 31 மாலை அறிவித்திடும் சட்டப்படி, நியாயப்படி, ஜனநாயகப்படி 30ஆம் நாள் அவகாசம் பற்றியெல்லாம் கவலைப்படாது திடீர் அறிவிப்பின் “ரகசியம்” தான் என்னவோ! திருப்பரங்குன்றத்திற்கு – நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது என்ற சாக்கு ‘ரெடிமேட்’ ஆயுதமும் கையில் இருக்கலாம். ‘மழை பெய்யும் ஆகவே தள்ளி வையுங்கள்’ என்று தமிழக அரசு முன்பே தனது தலைமைச் செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியது போல இப்போது ஏதாவது கடித வேண்டுகோள் போயிருக்கிறதா? மழை புயல் முடிந்து விட்டது உடனே வையுங்கள் – என்று கடிதம் ஏதாவதுபோனதா? திமுகவைப் பொறுத்தவரை அது என்றும் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறது என்பது நாடறிந்த உண்மையே! 20 தொகுதிக்கு தேர்தல் வைக்காமல் இதற்கென்ன தனி அவசரம்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க