• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2 பில்லியன் வாடிக்கையாளர் களை கடந்த பேஸ்புக்

June 28, 2017 தண்டோரா குழு

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 பில்லியனை கடந்துவிட்டது.

உலகின் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கை பயன்படுத்தாத மக்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பள்ளி மாணவர்கள் முதல் வயதானோர் வரை பேஸ்புக் சேவையால் அதிகம் கவரபட்டுள்ளனர்.தற்போது இந்த சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 பில்லியனை கடந்து விட்டது.

சமீபத்தில் பேஸ்புக் தவறான செய்திகளை பரப்பி வருவதாகவும், சில காணத்தகாத லைவ் ஸ்ட்ரீம் காணொளிகளை வெளியிட்டதாகவும் பல சர்ச்சைகளை சந்திக்க நேர்ந்தது.

பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி தனது பேஸ்புக் பதிவில் கூறியதாவது,

“இன்று(ஜூன் 28) காலை வரை சுமார் 2 பில்லியன் மக்கள் பேஸ்புக்கில் இணைந்து உள்ளனர். உலகை இணைப்பதில் முன்னேற்றம் அடைந்து வருகிறோம்.மேலும் பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

புதிய அப்டேட்டுகளை அவ்வப்போது வெளியிடுவதே பயனர்களை தங்களிடம் தக்கவைத்து கொள்வதற்கான தந்திரம் என கூறிய மார்க், அண்மையில் வெளியிடப்பட்ட ஃபேஸ்புக் நேரலை வீடியோ வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாதாக குறிப்பிட்டார்.

மேலும் படிக்க