• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கும் தேதி இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிப்பு !

September 20, 2017 தண்டோரா குழு

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2 ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கும் தேதி இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததால் அரசுக்கு ரூ 1,76, 000 கோடி இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாக சிபிஐ.,யால் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில், ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு, பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்து தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.மேலும் வழக்கின் முக்கிய ஆவணங்கள் முழுமையாக தயாராகாததால் தீர்ப்பின் தேதி செப்டம்பர் 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு தேதியை டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இவ்வழக்கின் தீர்ப்பு தேதியை அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் படிக்க