September 20, 2017 
தண்டோரா குழு
                                2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் அக்.25ல் தீர்ப்பு வழங்கப்படும் என சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததால் அரசுக்கு ரூ 1,76, 000 கோடி இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாக சிபிஐ.,யால் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு  செய்யப்பட்டது.இந்த வழக்கில், ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு, பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்து தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 
இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு  அக்.25ம் தேதி வழங்கப்படும் என சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.மேலும், அக்டோபர் மாதம் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவில்லை எனில் அடுத்த 2 அல்லது 3 நாள்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.