• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு

October 9, 2017 தண்டோரா குழு

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நவம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடன் மனு அளித்தனர். இதையடுத்து அவர்களை 18 பேரையும் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.,க்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் ஏற்கனவே சபாநாயகர் தனபால், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் சார்பில் பதில்கள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன.

இதனையடுத்து வழக்கு விசாரணை இன்று (அக்.,09) காலை 11.45 மணியளவில் துவங்கியது. அப்போது, தினரகன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். சபாநாயகர் தரப்பில் அரிமா சுந்தரம் ஆஜரானார்.

இதைத்தொடர்ந்து, சபாநாயகர், தினகரன், முதல்வர் ஆகியோர் தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் அளித்து நீதிபதி ரவிசந்திர பாபு வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் மாதம் 2ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

மேலும் படிக்க