• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

17 பேர் பலியானதற்கு காரணமான சுற்றுச்சுவர் அகற்றம்

December 5, 2019

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியானதற்கு காரணமான சுற்றுச்சுவர் வருவாய் துறையினரால் தற்பொழுது அகற்றப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து நான்கு வீடுகள் மீது விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 4 வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்திற்கு காரணமாக கூறப்படும் சுற்றுச்சுவர் மீதமுள்ளசுமார் 700 அடி நீளமும் 20 அடி உயரமும் கொண்ட சுற்றுச்சுவர் இன்று வருவாய் துறையினர் இடிக்கப்பட்டது.

இடிக்கும் பணியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் உள்ள ஒரு தரப்பினர் முன்னறிவிப்பின்றி சுற்றுச் சுவரை இடிக்க கூடாது என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையும் மீறி வருவாய்த்துறையினர் காவல்துறையின் உதவியுடன் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் படிக்க