தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 28). லாரி டிரைவர். இவருக்கும் கோவையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்படுகிறது. அந்த சிறுமி 8-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் மகேந்திரன் அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் காந்திபுரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இதனிடையே அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து பரிசோதனைக்காக சிறுமி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உள்ளார்.
அப்போது 16 வயது சிறுமி கர்ப்பம் அடைந்தது தொடர்பாக டாக்டர்கள் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி 16 வயது சிறுமியை திருமணம் செய்த மகேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்