• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

1587 வேட்புமனுக்களில் 932 மனுக்கள் ஏற்பு – தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ

March 28, 2019

மக்களவை தேர்தலுக்கு தமிழகத்தில் மொத்தம் 1,587 வேட்பு மனுக்களில் 932 மனுக்கள் ஏற்கப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியுள்ளார்.

நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், 2-ம் கட்டமாக ஏப்.18-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதைபோல், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அன்றைய தினமே இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 26/03/2019 அன்று நிறைவடைந்தது. இதனையடுத்து வேட்பு மனுதான பரசீலனை 27/03/2019 தொடங்கியது. இந்நிலையில் வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற இன்று மதியம் வரை கால அவகாசம் கொடுக்கப்ட்டது. காலக்கெடு முடிந்ததால் 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம். இதன் படி தமிழகத்தில் மக்களவை தொகுதியில் போட்டியிட சுமார் 1587 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு ஏற்பு : 976
வேட்பு மனு நிராகரிப்பு : 611.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை தலைமை தேர்தல் அதிகாரி,

அதிகபட்சமாக கரூர் மக்களவை தொகுதியில் 43 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது நீலகிரி மக்களவை தொகுதியில் மிகக் குறைவாக வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. தமிழக மக்களவை தொகுதிகளில் அதிகபட்சமாக 60 வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி ” தென் சென்னை”ஆக உள்ளது. 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 305 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 213 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக மீது 10, அதிமுக மீது 9, பாஜக மீது 2, பாமக மீது 3, மக்கள் நீதி மய்யம் கட்சி மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமமுக-வுக்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். தமிழகத்தில் இதுவரை ரூ 50.70 கோடி பணம், 223.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும் படிக்க