பரோலில் விடுவிக்க அனுமதி கேட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா மனு தாக்கல் செய்துள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இதனால், சசிகலா பரோலில் வெளிவந்து மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள தனது கணவர் நடராஜனை சந்திப்பார் கூறப்பட்டது.
இதையடுத்து, சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகளிடம் பரோல் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார். பரோல் விண்ணப்பத்தில் கணவர் நடராஜனின் உடல்நலக்குறைவே காரணம் காட்டி 15 நாட்கள் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.இதனால் கணவரை பார்க்கச் செல்ல சசிகலாவுக்கு அனுமதி வழங்க கோரி அளிக்கப்பட்டுள்ள மனு மீது கர்நாடக சிறைத்துறை விரைவாக நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்