• Download mobile app
15 Feb 2026, SundayEdition - 3658
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

142 நாய், 8 பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி

February 10, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம், எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் காளப்பட்டி அருகேயுள்ள வீரியம்பாளையம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் பெருமாள்சாமி தலைமை வகித்து வெறிநோய் தடுப்பு முறைகள் குறித்து விரிவாக உரையாற்றினார். வெறிநோய் தடுப்பு குறித்து ஓவியப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் முகாமில் 142 நாய்களுக்கும், 8 பூனைகளுக்கும் இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும் படிக்க