• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

140 லிருந்து 280 வரை எழுத்துக்களின் எண்ணிக்கையை உயர்த்தும் டுவிட்டர்

September 27, 2017

டுவிட்டரில் உறுப்பினர்கள் பதிவிடும் எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

உலக அளவில் புகழ்பெற்று விளங்கும் சமூகவலைத்தளங்களில் ஒன்று டுவிட்டர். பல கோடி மக்கள் டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர்.

இதையடுத்து டு்விட்டர் வலைதளத்தை மேம்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.அதன் படி பல புதிய திட்டத்திற்கான ஆய்வுகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதில் தற்போதைய கருத்து பதிவிடும் எழுத்துக்களின் எண்ணிக்கை உறுப்பினர்கள் பலருக்கு அதிருப்தி அளித்துள்ளது தெரியவந்திருப்பதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டது. இதனால் நினைத்த கருத்துக்களை முழுமையாக பதிவிட முடியவில்லை என பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து ட்விட்டரில் பதிவிடும் கருத்துகளின் எழுத்துக்களின் எண்ணிக்கையை 280 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தற்போது ட்விட்டரில் 140 எழுத்துக்களை மட்டுமே பதிவிட முடியும். டைப் செய்து செய்தி அனுப்பும் வசதி சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்,பயன்பாட்டாளர்களின் வசதிக்காக பதிவிடும் எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டை தளர்த்தி சோதனை அடிப்படையில் 280 எழுத்துக்கள் வரை பதிவிடும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் ஜப்பான், சீனா, கொரிய மொழி எழுத்து வடிவத்திற்கு பழைய வரம்பே நீடிக்கும் என கூறப்பட்டு்ளது. 140 எழுத்துக்களில் அதிகமாக கருத்தை பதிவு செய்யும் வகையில், அவற்றின் வடிவங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க