• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காஷ்மீர் ‘பெல்லட்’ பாதிப்பில் 14% பேர் 15 வயதுக்குட்பட்டோர்

August 22, 2016 தண்டோரா குழு

காஷ்மீரில் பெல்லட் துப்பாக்கியால் பாதிக்கப்பட்டவர்களில் 14 சதவீதத்தினர் 15 வயதுக்குக் குறைவானவர்களாக உள்ளனர்.

எட்டு வயதான ஜூனைத் அகமத் காஷ்மீரில் பெல்லட் துப்பாக்கியால் பாதிக்கப்பட்ட சமீபத்திய சான்றாகியுள்ளார்.நேற்று மாலை ஜூனைத் அகமத் பாதுகாப்பு படையின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

இது குறித்து ஜூனைத்தின் உறவினர் ஒருவர் கூறும்போது,‘ஜூனைத் அகமத் தனது வீட்டின் அருகே குழுமியிருந்த கூட்டத்தினரோடு நின்று கொண்டிருந்தான்.அப்போது அங்கு வந்த பாதுகாப்பு படையினரின் வண்டியைக் கண்டு அலறியுள்ளான்.அவனது வயதைக் கூட பொருட்படுத்தாமல் பாதுகாப்பு படையினர் பெல்லட் கன்னால் அங்குக் குழுமியிருந்தவர்களை நோக்கித் தாக்குதல் நடத்தினர்.

இந்த தக்குதலால் ஜீனைதின் மார்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும்,கடந்த ஜுலை மாதம் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தலைவராக இருந்த புர்கான் வானி கொல்லப்பட்டது முதல் காஷ்மீரில் கலவரங்கள் ஏற்பட்டு வருகிறது.

கலவரங்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்துகிறார்கள்.இதனால் பொது மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெல்லட் துப்பாக்கிகளால் பாதிக்கப்பட்டவர்களில் 14% பேர் ஜுனைத் அகமத்தை போன்று 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ மகாராஜ் ஹரி சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜூனைத்துக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் பேசும் போது, அவனது மார்பின் பல பகுதிகளில் பெல்லட் துப்பாக்கி தாக்குதலால் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

ஒரு வேளை ஜூனைத் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மிக அருகில் நின்றிருந்தான் என்றால் அவன் நுரையீரல் நிச்சயம் பாதிக்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், இதுவரை காஷ்மீரின் 10 மாவட்டங்களிலிருந்து பெல்லட் துப்பாக்கி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மாதத்தில் மட்டும் சுமார் 933 பேர் பெல்லட் துப்பாக்கி தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ மகாராஜ் ஹரி சிங் மருத்துவமனை கண் மருத்துவர் சஜத் கான்டே கூறும் போது, 440 பேருக்கு பெல்லட் துப்பாக்கி தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது.இதில் சுமார் 70க்கு மேற்பட்டோர் 15 வயதுக்குக் குறைவானவர்கள்.

இவர்களில் சுமார் 40 பேருக்குக் கடந்த வாரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.மேலும், 250 பேருக்குச் சிகிச்சை செய்யப்பட வேண்டியுள்ளது.அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்.

வயதானவர்களைக் காட்டிலும் சிறு வயதினருக்கு அறுவை சிகிச்சை செய்வது கடினமாக உள்ளது என்று வேதனையோடு தெரிவித்தார்.

மேலும் படிக்க