August 5, 2020
தண்டோரா குழு
கோவையில் 13 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கற்பழித்த சந்தோஷ் மற்றும் சதீஷ் ஆகியோரை துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகரைச் சேர்ந்தவன் சந்தோஷ்.23 வயதான இவன் அங்குள்ள தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில் வேலை செய்துவருகிறான். இவன் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வெளியில் செல்லலாம் என கூறி 13 வயது சிறுமியை அழைத்துக்கொண்டு கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி அருகே உள்ள குப்பை கிடங்கு பகுதிக்கு கூட்டி வந்துள்ளான்.அங்கு ஏற்கனவே காத்திருந்த பிரபு நகரைச் சேர்ந்த அவனது நண்பன் சதீஷ் என்பவனுடன் சேர்ந்து காதலன் சந்தோஷ் அச்சிறுமியை மிரட்டி கற்பழித்துள்ளான்.இது குறித்து அச்சிறுமி அளித்த புகாரின் பேரின் வழக்கு பதிவு செய்த துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளார் அருளரசு உத்தரவின் பேரில் பெரிய நாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் மணி, துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் பால முரளி சுந்தரம், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அனந்தநாயகி மற்றும் உதவி ஆய்வாளர் குப்புராஜ் பயிற்சி உதவி ஆய்வாளர் கார்த்தியேன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளான சந்தோஷ் மற்றும் சதீஷ் இருவரையும் 13 வயது சிறுமியை கற்பழித்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.