• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

120 வயதில் முதல் முறையாக மருத்துவமனைக்குச் சென்ற யோகி

August 4, 2016 தண்டோரா குழு

காசியில் வசிப்பதாகக் கூறிக் கொண்டாலும், நாடு முழுக்க சுற்றித் திரியும் நிஜ துறவி சுவாமி சிவானந்தா. இந்தத் துறவி 120 வயது நிரம்பியவர். ஆனால், பார்ப்பதற்கு 50 வயதை எட்டியவர் போலவே காணப்படுகிறார். முகத்தில் சுருக்கம் கூடத் தென்படவில்லை.

கடந்த ஒரு மாதமாக கொல்கத்தா சால்ட்லேக் பகுதியில் தங்கியிருந்த சிவானந்தா பிரசங்கம் முடிக்கும் சமயங்களில், தலை வலிப்பதாகக் கூறியுள்ளார். இந்தப் பிரச்சனை அடிக்கடி வரவே, அவருடன் இருந்த அவருடைய சீடர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.

இவரை கொல்கத்தா மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் பரிசோதித்தனர். சுமார் 120 வயதில் சிவானந்தாவின் மனோ திடம், உடல் ஆரோக்கியம் அவர்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. மருத்துவமனையில் சர்பங்காசனத்தில் அவர் அமர்ந்த போது, பார்த்த அனைவரும் வாயடைத்து நின்றனர்.

எக்ஸ்ரே கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலகட்டத்தில் பிறந்த சுவாமி சிவானந்தா வாழ்க்கையில் முதல் முறையாகச் சிகிச்சைக்காக மருத்துவமனை படியேறி, எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரத்தில் முதல் முறையாக பரிசோதனை செய்துகொண்டார்.

அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், பரிசோதனை முடிவில், சிவானந்தாவுக்கு எந்தப் பிரச்சினையுமே இல்லை என்று மருத்துவர்கள் அறிவித்தது தான் இந்த ஆச்சரியத்திற்குக் காரணம். உயர் ரத்த அழுத்தம் மட்டுமே அவருக்கு இருக்கும் ஒரே பிரச்சினை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சில மருந்துகளை உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் அவருக்குப் பரிந்துரை செய்தனர்.

மேலும், சில பச்சை மிளகாய் துண்டுகள், வேக வைத்த உணவு, தினசரி உடற்பயிற்சி யோகா ஆகியவையே, சுவாமி சிவானந்தாவின் ஆரோக்கிய வாழ்வின் ரகசியம் என்று அறியப்படுகிறது.

இது குறித்து அவர் கூறும் போது, உணவை அளவாக உண்ண வேண்டும், அமைதியும், அடக்கத்துடனும் வாழ வேண்டும், இரக்கமும், கருணையும் கொண்டிருக்க வேண்டும் என்பதில் நான் பெரும் நம்பிக்கை கொண்டவன். அதோடு, துயரத்தில் இருப்பவர்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்யும் போது, மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும் என்று தெரிவித்தார்.

கொஞ்சம் சாதம், வேக வைத்த பருப்பு மற்றும் காய்கறி அவற்றுடன் 2 பச்சை மிளகாய், இது தான் அவரின் வழக்கமான உணவு. மருத்துவமனையில் அவருக்கு அரிசியை கஞ்சியாக்கிக் கொடுத்தனர் ஏனெனில் சுவாமி சிவானந்தாவின் வயோதிகத்தை காட்டிக் கொடுக்கும் ஒரே அம்சமாக, அவருக்குப் பற்கள் விழுந்துவிட்டன என்பது தான்.

மேலும், சிறு வயதில் இருந்தே, பல இரவுகளில் சாப்பிடாமல், வெறும் வயிற்றுடன் தூங்கியதாகவும் அவரை பொறுத்தவரை, சமைத்த உணவே ஆடம்பரம் என்று எண்ணுவதாகக் கூறினார். மேலும், பசித்தவர்களுக்கு, பால், பழம் போன்றவை ஆடம்பரமானவை என்பதால், அவற்றை ஒதுக்கிவிடுகிறேன் என்று சிவானந்தா தெரிவித்தார்.

மேலும் படிக்க