• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

12 வயதில் தந்தையான சிறுவன் !

March 23, 2017 தண்டோரா குழு

கேரளாவில் 12 வயது சிறுவன் ஒருவன் ஒரு குழந்தைக்கு தந்தையான சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

கேரளா மாநிலத்தின் எர்ணாகுளம் பகுதியில் 12 வயது பள்ளி சிறுவன் ஒரு குழந்தைக்கு தந்தையாகியுள்ளான். இவனே இந்தியாவில் மிக சிறிய வயது தந்தையாகும்.

எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 16 வயது சிறுமி பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டாள். கடந்த சில மாதங்களுக்கு முன் அவளுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அவள் வசிக்கும் பகுதியிலுள்ள 12 வயது சிறுவன் தான் இதற்கு காரணம் என்று அவள் தெரிவித்தாள். அவள் கூறியது கேட்ட அவர்கள் ஆச்சரியமடைந்தனர். நம்ப முடியாத அவர்கள் மருத்துவ ரீதியாக பரிசோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி மருத்துவமனையில் அந்த சிறுவனுக்கும் குழந்தைக்கும் மரபணு சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையின் முடிவில், அந்த சிறுவன் தான் அக்குழந்தைக்கு தந்தை என்று உறுதிசெய்யப்பட்டது.

காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின் கீழ், பெற்றோர் மற்றும் குழந்தையின் அடையாளங்களை வெளியிடவில்லை.

இது குறித்து திருவந்தபுரம் மருத்துவ கல்லூரியின் உட்சுரபியல் பிரிவு தலைவர் டாக்டர் பி.கே. ஜப்பார் கூறுகையில், “பருவ வயது அடையும் முன் ஒருவரால் குழந்தை பெற முடியாது. ஆனால் இந்த சிறுவன் மருத்துவ ரீதியாக குழந்தை பெரும் நிலையை அடைந்து விட்டான். இதனை வயதுக்கு மீறிய வளர்ச்சி என்று மருத்துவத்தில் அழைப்பர்.

தந்தையிடமிருந்தும் குழந்தையிடமிருந்தும் சேகரித்த ரத்த மாதிரிகளில் உள்ள டி.என்.ஏ., மரபணுவை மருத்துவ நிபுணர்கள் ஒப்பிட்டு பார்த்தனர். அதன் முடிவில், அந்த சிறுவனே அக்குழந்தையின் தந்தை என்று உறுதியாகிவிட்டது” என்றார்.

கேரள காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின் கீழ் அந்த சிறுவனின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க