• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவு – கோவை மாவட்டம் 96.66 சதவீத தேர்ச்சி !

May 8, 2026 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் 96.66 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 13வது இடத்தை கோவை மாவட்டம் பிடித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 35,448 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 34,264 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 16,235 பேர் தேர்வு எழுதியதில் 15,531 பேரும், மாணவிகள் 19,213 பேர் தேர்வு எழுதியதில் 18,733 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 95.66 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.50 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.

கல்வி மாவட்ட வாரியாக பார்க்கையில், கோவை கல்வி மாவட்டத்தில் 96.79 சதவீதமும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 96.17 சதவீதமும் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.

மேலும், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை உள்ளடக்கிய மொத்தம் 158 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 13 அரசு பள்ளிகள், 7 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 138 தனியார் மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள் இடம்பெற்றுள்ளன.

நூறு சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளில் வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, எடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, நாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, அட்டக்கட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆல்வெர்னியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, விவேக் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஜி.ஆர்.ஜி மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட பல தனியார் பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

மேலும் படிக்க