• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

116 வயதில் வங்கி கணக்கு தொடங்க முயற்சிக்கும் மூதாட்டி.

April 29, 2017 தண்டோரா குழு

மெக்ஸிகோவில் 116 வயதில் வங்கி கணக்கு தொடங்க முயற்சிக்கும் மூதாட்டி. 11௦ வயது வரை மட்டுமே வங்கி கணக்கு தொடங்க முடியும் என்று கூறும் வங்கி அதிகாரிகள்.

மெக்ஸிகோவின் குயாடாலஜாரா நகரை சேர்ந்தவர் மரியா பெலிக்ஸ். இவருக்கு வயது 116. வயது மூப்பு காரணமாக அவர் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய அரசிடம் நிதி உதவி கேட்டிருந்தார். அரசாங்கம் அவருக்கு காசோலை அனுப்பியது.அந்நாட்டில் அரசு உதவிகளை பெற வங்கி அட்டை அவசியம்.

மரியாவிடம் வங்கி கணக்கு இல்லாததால் அதற்காக சிட்டிகுரூப் வங்கியில் விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால், வங்கி அட்டை 11௦ வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே தரமுடியும் என்று அந்த வங்கி கூறி, அவருடைய விண்ணப்பத்தை ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்த சம்பவம் மெக்ஸிகோ நாட்டின் பத்திரிக்கைகளில் வெளியானது. இதை அறிந்த அந்த வங்கி நிர்வாகி காஸ்ட்ரோ, இந்த பிரச்சனையில் தலையிட்டு, அவருக்கு அரசாங்கம் அளித்த காசோலையை தொகையாக அவருக்கு அனுப்பியுள்ளார்.

மேலும், வங்கி அட்டை பிரச்சனை முடியும் வரை மாதம்தோறும் பெலிக்ஸ்க்கு சேர வேண்டிய பணத்தை, தன்னுடைய அலுவலகம் அனுப்பும் என்று தெரிவித்தார். காஸ்ட்ரோவின் இந்த அறிவிப்பையடுத்து, பெலிக்ஸ்க்கு அரசின் உதவிகள் கிடைத்து வருகிறது.

மரியா பெலிக்ஸ் கடந்த 19௦௦ம் ஆண்டு பிறந்தவர். அவருக்கு 1௦ குழந்தைகளும், 2௦ பேரபிள்ளைகளும், 53 கொள்ளு பேரபிள்ளைகளும், 23 பெரிய கொள்ளு பேரபிள்ளைகளும் உள்ளனர். அவருடைய வீட்டின் முன் இனிப்பு பண்டங்களை விற்று, அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து தனது வாழ்நாளை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மரியா பெலிக்ஸ் கூறுகையில்

“11௦ வயது வரைதான் அரசு உதவிகளை பெற உதவும் வங்கி அட்டை தரப்படும். 11௦ வயதை தாண்டியவர்களுக்கு வங்கி அட்டை தரப்படமாட்டாது என்று வங்கி தெரிவித்தது. அரசின் உதவியை பெறுவதை குறித்து எனக்கு கவலையில்லை. வங்கி அட்டை தரவில்லை என்றாலும் பரவாயில்லை. ஏழ்மையான வாழ்கையை வாழ்ந்த போது, மகிழ்ச்சியாக இருந்தது போல், மகிழ்ச்சியாக இருந்து விடுவேன்” என்றார்.

மேலும் படிக்க