• Download mobile app
07 May 2026, ThursdayEdition - 3739
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவிலுக்குள் நுழைய பெண்களுக்கு சம உரிமை வழங்கக்கோரி நீதிமன்றத்தில் கோஷமிட்ட மாவோயிஸ்ட்கள்

October 22, 2018 தண்டோரா குழு

கோவை அருகே கருமத்தம்பட்டியில் கடந்த 2015ம் ஆண்டு மாவோயிஸ்ட் தலைவர் ரூபேஸ்,அவரது மனைவி சைனா மற்றும் மாவோயிஸ்ட்கள் கண்ணன்,அனூப், வீரமணி ஆகிய 5 பேரை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ரூபேஸ் மீது கேரளாவில் பல வழக்குகள் உள்ளதால்,திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டார்.சைய்னாவிற்கு சில மாதங்களுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது.இந்த வழக்கு விசாரணை கோவை 3வது கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நடந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 13ம் தேதி மீண்டும் தமிழக மற்றும் கேரளா காவல் துறைக்கு ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை தரிசிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டதை அடுத்தும்,பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முடியாமல் திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த மாவோயிஸ்ட்கள் அனூப்,கண்ணன்,வீரமணி ஆகியோர் கோவில் நுழைய பெண்களுக்கு சம உரிமைக்காக போராடுவோம்,போராடுவோம் என கோஷமிட்டு சென்றனர்.

மேலும் படிக்க