• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய 104 கிரகங்கள் கண்டுபிடிப்பு

July 21, 2016 தண்டோரா குழு

இன்று அறிவியலும் விஞ்ஞானமும் அதிக அளவில் வளர்ந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

முன்பை விட இந்த வளர்ச்சியால் பல துறைகளில் புதிய புதிய மாற்றங்களைக் கொண்டு வந்து உள்ளது. இந்த வளர்ச்சி நல்லதா கெட்டதா என்று பட்டிமன்றம் வைத்தால் நன்மையே என்று முடிவு கூறும் நிலையில் தான் இருக்கிறோம்.

தற்போது நமது சூரிய அமைப்புக்கு வெளியே சுமார் 104 புதிய கிரகங்களைத் கண்டறிந்திருப்பதாகச் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று கூறுகிறது.

இதில் நான்கு கிரகங்கள் பூமியைப் போலவே பாறைகள் மிகுந்த மேற்பரப்பைக் கொண்டிருக்கின்றன. இந்த நான்கு கிரகங்களும் ஒரே நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றன என்றும் அவை சுமார் 400 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், கெப்லர் விண்ணோக்கி மூலமும், பூமியிலிருந்து செய்யப்பட்ட கண்காணிப்புகள் மூலமும் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கிரகக்கூட்டங்களில் சுமார் 21 கிரகங்கள் உள்ளன.

அவை சூரியனிலிருந்து வசிக்கக்கூடிய தொலைவில் உள்ள பகுதியில் இருக்கின்றன. இந்தத் தொலைவில் இருந்தால் தான் கிரகங்களில் உயிர் வாழ அனுமதிக்கக் கூடிய அளவு திரவ நிலையில் தண்ணீர் இருக்கும்.

இந்த கெப்லர் விண்ணோக்கி செயலிழந்துவிட்டதாக மூன்றாண்டுகளுக்கு முன்னர் கருதப்பட்டது. ஆனால், அதன் நான்கு சக்கரங்களில் இரண்டு இழக்கப்பட்ட நிலையிலும், நாசா விஞ்ஞானிகள் அந்த
விண்கலனை இயங்கும் நிலையில் வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க