• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

104 வயது முதியவருக்கு வெற்றிகரமாக குடல் அறுவை சிகிச்சை செய்து சாதனை !

January 31, 2020

104 வயது முதியவருக்கு வெற்றிகரமாக குடல் அறுவை சிகிச்சை செய்து லிவர் அன்ட் கேஸ்ட்ரோ கேர் மருத்துவமனையன சாதனை படைத்துள்ளது.

கோவை, திருச்சி சாலையில் லிவர் அன்ட் கேஸ்ட்ரோ கேர் மருத்துவமனையில் 104 வயது முதியவருக்கு வெற்றிகரமாக குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த மருத்துவமனையில் கடந்த 2020 ஜனவரி 16ம் தேதி கேரளா மாநிலம், பாவாஜி நகர், வேலந்தாவலம் அஞ்சல், ஓலப்பதியை சேர்ந்த திரு. கிட்டுசாமி என்ற 104 வயது பெரியவர் வயிற்று வழி மற்றும் வாந்தி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவரது விதைப்பையில் குடல் இறக்கம் மற்றும் அடைப்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் அதை குறைக்க வழியில்லை.

சிடி ஸ்கேன் படப்பதிவில், உட்புற குடல் இறக்க, வளையத்தில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. பெரியவருக்கு இதுவரை, சர்க்கரை வியாதி, ஆஸ்துமா, ரத்த அழுத்தம் போன்றவை இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தார். இதனால், டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

அவருக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சை குறித்து அவரது பிள்ளைகளுக்கு விளக்கம் தரப்பட்டது. அவர்களது அனுமதியுடன் 2020 ஜனவரி 16 ல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்து 24 மணி நேரத்தில் அவரது உடல் நலம் தேறியது. 48 மணி நேரத்தில் அவர் நடமாட தொடங்கினார். அறுவை சிகிச்சைக்குப்பின் 5 வது நாளில் திரு. கிட்டுசாமி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் அவர் வழக்கமான உணவுக்கு மாறினார்.

இவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் எஸ். விஜயக்குமார் கூறுகையில், ‘

‘104 வயதானவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மிக விரைவில் குணமடைந்தது மிக அதிசயமான ஒன்று. முன்பெல்லாம் 100 வயது வரை உயிருடன் இருப்பதே மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், தற்போது 104 வயது உள்ளவருக்கு ஆபரேஷன் செய்வது விரைவில் குணமடைவது மிகப்பெரிய விஷயம். அவரது சுத்தமான உணவு பழக்க வழக்கமும், ஆரோக்கியமான உடல் நலமும் விரைவில் அவரை குணப்படுத்தியுள்ளது. இவருக்கு வந்த இந்த பிரச்னை வயது வித்தியசாமின்றி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதை முன்கூட்டியே வராமல் தடுக்கவும் முடியாது. ஆனால், ஆரம்ப நிலையிலயே சரியாக கண்டறிந்து குணப்படுத்த முடியும்,’’ என்றார்.

மேலும் படிக்க