• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

100 நாள் திட்டத்தை மேம்படுத்த மத்திய அரசு ஆராயும் – வானதி சீனிவாசன் பேட்டி

October 6, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் ஆட்சியர் அலுவலகத்தில் தொகுதி தொடர்பான கோரிக்கைகள் குறித்து மனு அளித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

முதியோர் உதவி தொகை கிடைக்க பெறாதவர்களுக்கு உடனடியாக கிடைக்க பெற நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். பாஜக ஆட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சம்பளம் உயர்த்தபட்டது. இத்திட்டத்தை விவசாய மக்களோடு இணைந்து செயல்படுத்த வேண்டும். இதனை மேலும் மேம்படுத்த மத்திய அரசு ஆராயும்.

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாநிலத்தின் முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். அது பாரபட்சமற்ற நடவடிக்கையாக இருக்கும். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய நிலை அம்மாநில அரசிற்கு உள்ளது. சூழலின் தன்மையை கருதியே காங்கிரஸ் தேசிய பொது செயலாளர் பிரியங்கா காந்தி அனுமதிக்கபடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை அடுத்து கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கராவிடமும் தெற்கு தொகுதி தொடர்பான கோரிக்கைகள் குறித்த மனுக்களை வானதி சீனிவாசன் அளித்தார்.

மேலும் படிக்க