November 11, 2017
தண்டோரா குழு
சீனாவில் 1 லட்சம் ரூபாய் முன் பணம் செலுத்துபவர்களுக்கு ஆயுள் முழுவதும் ‘பைஜு’ எனப்படும் மது வழங்கப்படும் என்று அலிபாபா மது நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவில் ஷாங்காய் பகுதியில், ஆண்டுதோறும் நவம்பர் 11ம் தேதி ‘கல்யாணம் ஆகாதவர்களுக்காக’ மிகப்பெரிய திருவிழா நடைபெறுகிறது. இந்த கொண்டாடத்தை முன்னிட்டு சீனாவை சேர்ந்த அலிபாபா என்னும் மது நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை வழங்கியுள்ளது.
இதையடுத்து, இன்று(நவம்பர் 11) 1 லட்சம் ருபாய் முன் பணமாக 11,111 யுவான்(1,275 பவுண்ட்) செலுத்தினால்,‘ பைஜு’ எனப்படும் தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை சீன வகை மதுஆயுள் முழுவதும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்த சலுகை பெற்றுக்கொள்ள விரும்பும் முதல் 33அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு, மாதந்தோறும் 12 மது பாட்டில்கள் வழங்கப்படும்.ஒருவேளை அந்த வாடிக்கையாளர்,5 ஆண்டுக்குள் மரணம் அடைந்துவிட்டால் அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு இச்சலுகை அளிக்கப்படும்.