• Download mobile app
29 Aug 2026, SaturdayEdition - 3853
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹைதராபாத் தொழிற்சாலையில் தீ விபத்து, 6 பேர் பலி

February 22, 2017 தண்டோரா குழு

குளிர்சாதனக் கருவி தயாரிப்புத் தொழிற்சாலையில் புதன்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி இறந்தனர்.

ஹைதராபாத், ராஜேந்திரா நகர் காவல் நிலைய எல்லையில் உள்ள உப்பேர்பள்ளி என்னும் இடத்தில் இவோன் பேட்டரி நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

“அட்டப்பூர் என்ற பகுதியில் அமைந்த அந்த ஆலையில் அதிகாலை 5 மணியளவில் புகையுடன் தீ வருவதைக் கண்டோம். உடனடியாகத் தீயணைப்புக் கருவிகள் கொண்டுவரப்பட்டு, தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால், உள்ளே இருந்து ஆறு பேரின் கருகிய உடல்களைத்தான் கொண்டு வர முடிந்தது” என்று காவல் துறை துணை ஆணையர் பி.வி. பத்மஜா தெரிவித்தார்.

உயிரிழந்த 6 பேரில் 4 பேருடைய அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் சதாம்கான், சாது, இர்ஃபான்கான், அயூப்கான் ஆவர். உயிரிழந்தவர்கள் சத்தீஸ்கர் மற்றும் பிஹார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மற்ற இரண்டு பேரின் பெயர், ஊர் ஆகிய விவரங்கள் தெரியவில்லை.

“தீயை அணைக்க 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் உயிரிழந்த 6 பேருடைய உடல்கள் பிரேத சோதனைக்காக உஸ்மானியா அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தீவிபத்துக்கு ஆளான நிறுவனத்தில் பொதுவாக நான்கு தொழிலாளர்கள்தான் இருப்பர். ஆனால், செவ்வாய்க்கிழமை மேலும் இரண்டு பேர் பணியில் சேர்ந்திருக்கிறார்கள். அந்நிறுவனத்தைச் சுற்றி குடியிருப்புப் பகுதிகள் உள்ளன.

அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிற்சாலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது” என்று காவல் துறை அதிகாரி பத்மஜா தெரிவித்தார்.

மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.

மேலும் படிக்க