• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹாட்ரிக் சிக்ஸர், நோ பால் என சட்டப்பேரவையில் கிரிக்கெட் பேச்சு !

February 12, 2019 தண்டோரா குழு

தமிழக சட்டபேரவையில் கிரிக்கெட் பேச்சு எழுந்ததால் சிறிது நேரம் சிரிப்பொலி ஏற்பட்டது.

முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது, மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, முதல்வர் ஹாட்ரிக் சிக்சர் அடிப்பார் என்று நகைச்சுவையாக பேசியிருந்தார். இந்நிலையில் இன்று சட்டபேரவை கூடியதும் செம்மலை பேசியதை குறிப்பிட்டு பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வீசும் பந்தில் அதிமுக கிளீன் போல்ட் ஆகும் என்று கூறினார். அப்போது, அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலின் வீசும் பந்து நிச்சயம் நோ பாலாக தான் இருக்கும் என்று விமர்சனம் செய்தார்.

இவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கமணி, மைதானத்திற்குள் வந்து வீசப்படும் பந்து தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும், எதிர்கட்சி தலைவர் இன்னும் மைதானத்திற்கு உள்ளே வராமல் பந்தை வீசிக்கொண்டு இருக்கிறார் என்றும் விமர்சனம் செய்தார். இதனால் பேரவையில் சிறிது நேரம் சிரிப்பொலி ஏற்பட்டது.

மேலும் படிக்க