• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பார்மஸி கல்லூரியில் 27 வது பட்டமளிப்பு விழா

தண்டோரா குழு
February 1, 2020 புதிய செய்திகள்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா இணை மருத்துவ கழகத்தின் ஒரு அங்கமான பார்மஸி கல்லூரியில் 27 வது பட்டமளிப்பு விழா இன்று காலை ராமகிருஷ்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள வேலுமணி அம்மாள் அரங்கத்தில் நடந்தது.

விழாவில் கல்லூரியின் முதல்வர் வரவேற்புரை ஆற்றினார்.எஸ் என் ஆர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி தலைமை வகித்துப் பேசினார்.சிறப்பு விருந்தினராக போர்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் எஸ் வி. வீரமணி கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் பி.பார்ம், எம். பார்ம், பி.ஹெச்.டி உள்ளிட்ட படிப்புகளை முடித்த 175 க்கு மேற்பட்ட
மாணவ, மாணவியர் பட்டங்களை பெற்றனர்.

பார்மஸி துறைகளில் சிறந்து விளங்கிய சுவாதி, கிறிஸ்டினா சாலிமன், சங்கீதா, கிறிஸ்டிமேரி வர்கிஸ், பிரிஸில்லா மேத்யு, தாராயில் நிஷி நைய்னன், அக்ஷயா, ரீட்டு மோல் வர்கீஸ், அபர்ணா, ஷைனி ஆகியோர் தங்கப் பதக்கம் மற்றும் ஒட்டுமொத்த தரவரிசை சான்றிதழ்களை பெற்றனர்.

நிறைவாக கல்லூரியின் துணை முதல்வர் கோபால்ராவ் நன்றியுரையாற்றினார்.

மேலும் படிக்க