September 5, 2020
தண்டோரா குழு
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று முன்னாள் மாணவர்களோடு ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.
மேனாள் குடியரசத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களுடைய பிறந்தநாளான அன்று அவருடைய திருவுருவப்படத்திற்கு ஆசிரியர்கள் மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர். பி.எல்.சிவக்குமார் மற்றும் துணை முதல்வர் முனைவர் எஸ்.தீனா ஆகியோருக்கு கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பேரா.முனைவர் ஆர்.பிரபு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ராமகிருஷ்ணா கல்லூரியில் பயின்று இன்று அதேக ல்லூரியிலும், பிற கல்லூரிகளிலும் பேராசிரியர்களாகப் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் இணைந்து தங்களது ஆகிரியர்களுக்கு வாழ்த்துக்களை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர். மாணவர்களாக இருந்த போது தங்களுக்கு புத்தகங்களை போதித்ததை நினைவூட்டும் வகையில் பூங்கொத்துகளோடு புத்தகங்களையும் நினைவுப்பரிசாக வழங்கி தங்கள் ஆசிரியர்களைஆச்சரியத்தில்ஆழ்த்தினர்இம்முன்னாள்மாணவர்கள்.
மேலும்,இணையவழியாகவும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம்இருந்தனர். கல்லூரியின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவர் முனைவர் விஜயகுமார், வணிகவியல் புலமுதன்மையர் சண்முகானந்த வடிவேல், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.