July 28, 2020
தண்டோரா குழு
கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக “உலக இயற்கை பாதுகாப்பு தினம்”இக்கல்லூரியில் கொண்டாடப்பட்டது.
இத்தினத்தை முன்னிட்டு இயற்கையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் மூலிகைச் செடிகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல். சிவக்குமார் அவர்கள் மூலிகைச் செடிகளை நட்டார். நிலவேம்பு, நோனி, துளசி, கற்பூரவல்லி போன்ற பாரம்பரிய இயற்கைச் செடிகள் இதில் இடம்பெற்றிருந்தது. தற்காலத்தில் இயற்கையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்களான பேராசிரியர்கள் பிரகதீஸ்வரன், நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.