September 13, 2017
தண்டோரா குழு
சேலத்தில் சரோஜா என்பவரின் குடும்ப அட்டையில் நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம்
அச்சிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சரோஜா என்பவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால் படம் அச்சிடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் பழைய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சரோஜா என்பவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது.
இதுக்குறித்து சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடை ஊழியர்களிடம் கேட்ட போது அச்சடிக்கும் போது தவறு ஏற்பட்டிருக்கலாம் என்றும்,இ சேவை மையத்தில் திருத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.