June 10, 2020
தண்டோரா குழு
ஸ்மார்ட் சிட்டி பணிகளை தொய்வின்றி செய்ய இயக்குனர் ராகுல் கபூர் அறிவுரை
வழங்கினார்.
தமிழ்நாடு கர்நாடகா கேரளா மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பான ஸ்மார்ட் சிட்டி இயக்குனர் ராஜ்கபூர் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆய்வு செய்தார்.கோவை மாநகராட்சி அதிகாரிகள் இந்த வீடியோ கான்பிரன்ஸ் நிகழ்வில் பங்கேற்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்ட பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இணைத்துள்ள காலக்கெடுவுக்குள் இன்று பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வாலங்குளத்தில் மூன்று பிரிவுகளாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வடக்குப் பகுதியில் ரூ. 24.31 கோடி மேம்பாலத்தின் கீழ் ரூ. 23.83 கோடி மற்ற பகுதிகளில் ரூ. 67. 86 கோடியில் வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் கரையிலிருந்து குளத்தின் மையப்பகுதிக்கு நடந்து செல்லும் வகையில் நடை பாலம் கட்டப்படுகிறது. இதற்கான குளத்துக்குள் மண் பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.