August 11, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமாா் ஜடாவத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குறிச்சி குளத்தில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகள் குறித்து பொறியாளர்கள் மற்றும் குளங்கள் பாதுகாப்பு அமைப்புகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கமிஷனர் ஷ்ரவன்குமாா் ஜடாவத் கூறும்போது,
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளிலுள்ள 9 குளங்ளை புனரமத்து நவீனப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சி மற்றும் குனியமுத்தூர் சாலைகளுக்கு இடையில் அமைந்துள்ள குறிச்சி குளத்தினை இணைப்பது முக்கிய நோக்கமாகும்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்களை அழகு படுத்துவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு புத்துணர்ச்சி மற்றும் குளத்தில் இயற்கை சுத்திகரிப்பு, நுழைவாயில், வடிகால் அமைப்புகள் போன்றவற்றை சுத்தம் செய்வதில் இந்த திட்டத்தின் நோக்கமாகும்
ஸ்மார்ட் சிட்டி சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு மற்றும் புத்துணர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்படும். ஒன்பதாவது குளம் குறிச்சி குளம் ஆகும் குளத்தின் மொத்த பரப்பளவு 334 ஏக்கர் ஆகும் குறிச்சி குளத்தின் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர் கரைகளை பலப்படுத்தி அவற்றில் சைக்கிள் பாதசாரிகள் நடைபாதை ஒவ்வொரு 500 மீட்டர் இடைவெளியில் கழிப்பறைகள், படகு சவாரி, உணவகங்கள், யோகா, உடற்பயிற்சி கூடங்கள், கருப்பொருட்கள் தோட்டங்களில் பாலம், சமுதாயக் கூடங்கள், மற்றும் பறவைகளின் வாழ்விடத்தை மேம்படுத்த மரங்களோடு கூடிய தனி தீவு போன்றவற்றை அமைய உள்ளது. எனறாா்.