• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை வாலாங்குளம் கரையில் சிற்றுண்டி கடை அமைக்கும் பணி

November 16, 2019 தண்டோரா குழு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை வாலாங்குளம் கரையில் சிற்றுண்டி கடை அமைக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள குளங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வபுரம் ஆகிய குறைகளை பயன்படுத்தப்பட்டு பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி கோவை வாலாங்குளம் குளக்கரையில் நடைபாதை பொதுமக்கள் உட்காரும் வகையில் பார்வை கூடங்கள் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன. வாலாங்குளம் குளக்கரை ஒட்டியுள்ள பைபாஸ் சாலையில் விரைவில் சீரமைக்கப்பட உள்ளது.

தற்போது உக்கடம் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள பாலத்தின் கீழ் பகுதியில் பொதுமக்கள் உட்கார்ந்து சாப்பிடுவதற்கான மேஜை நாற்காலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி கூறும்போது,

வாலாங்குளம் மேம்பாலத்தின் நடுவில் ரயில் தண்டவாளம் உள்ளது .அந்தப் பாதையின் இருபுறமும் பாலக்கரை ஒட்டி அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேம்பாலத்தின் ஒருபுறம் சிற்றுண்டி கடைகள் ஓட்டல்கள் மறுபுறம் சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் நிறுவப்படும். மேலும் மேம்பாலத்தின் கீழ் பகுதி பல்வேறு நிறங்களில் பெயிண்ட் அடிக்கப்படும் உள்ளது. அதன்படி குளக்கரை மற்றும் மேம்பாலம் புதிய பொலிவுடன் தோற்றமளிக்கும் இந்த பணிகள் மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

மேலும் படிக்க