• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்டாலின் அதிமுகவை நேரடியாக சந்திக்க திராணியற்றவர் – முதல்வர் பழனிச்சாமி

January 23, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜவீதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்மேற்கொண்டார். ஏராளமான அதிமுக தொண்டர்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேசிய அவர்,

விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கின்றது. கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தேர்தல் வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பொய்யான அறிக்கையினை வெளியிடுகின்றார். மக்கள் கிராமசபை என்ற நாடகத்தை அரங்கேற்றுகின்றார் அவரது கட்சியினரை அழைத்து வந்து நாடகம் ஆடி கொண்டு இருக்கின்றார் மக்கள் கிராம சபை நடத்தினார். அங்கே ஒரு பெண் கேள்வி எழுப்பினார். அவரை திமுகவினர் தாக்கினர் மக்கள் கிராம சபை நடத்தி இருந்தால் அந்த பெண்மணியின் கேள்விக்கு ஸ்டாலின் பதில் சொல்லி இருக்க வேண்டும் ஆட்சியை குறை சொல்வதுதான் அவரது நோக்கம்.திமுக நிர்வாகிகள் அந்த பெண்ணை தாக்கினார்கள் மக்கள் கிராம சபை கூட்டம் மக்களுக்கு நன்மை செய்யும் கூட்டமல்ல. அதிமுகவை விமர்சனம் செய்யவே கிராம சபை கூட்டம் நடத்துகின்றார் ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இதே போன்று கிராம சபை நடத்தி கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது ? ஸ்டாலின் ஒரு அரசியல் தலைவரா? அதிமுகவை நேரடியாக சந்திக்க திராணியற்றவர். ஸ்டாலின் வேண்டும் என்றே திட்டமிட்டு அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று விட்டீர்கள். இப்போது முடியாது மக்கள் கிராம சபை கூட்டத்தில் சிரிப்பது , ஸ்டாலினை எள்ளி நகையாடி சிரிக்கின்றனர் .கிண்டலாக சிரிப்பதை கூட ஸ்டாலினால் உணர முடியவில்லை 2011 க்கு முன்பு கோவை எப்படி இருந்தது . இந்த 10 ஆண்டுகளில் எப்படி இருக்கின்றது என்பதை அதிமுக செய்த சாதனைக்கு பொது மக்கள் நற்சான்றிதழ் அளிக்க வேண்டும் திமுகவை போல குறை சொல்லி வாக்கு கேட்க வில்லை. செய்ததை சொல்லி, செய்ய போவதை சொல்லி வாக்குகளை கேட்கின்றோம் இரு பெரும் தலைவர்களின் சாதனைகளால் தமிழகம் தலைநிமிர்ரந்து இருக்கின்றது ஸ்டாலின் அதிமுக கட்சியை உடைக்க முயன்றார். ஆட்சியை கவிழ்க்க முயன்றார். இவற்றையெல்லாம் முறியடித்தோம் 250 கோடி மதிப்பீட்டில் இந்த கோவை தெற்கு தொகுதியில் பணிகள் நடைபெற்று வருகின்றது என்றார்.

மேலும் படிக்க