• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன், நீங்களா, நாங்களா என ஒரு கை பார்த்துவிடுவோம் – தமிழிசை

January 19, 2019 தண்டோரா குழு

ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன், நீங்களா, நாங்களா என ஒரு கை பார்த்துவிடுவோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொல்கத்தாவில் மாநாடு நடத்தி வருகின்றன. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியின் ஆட்சி குறித்து மோடி குறித்தும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அப்போது பேசிய ஸ்டாலின்,

இந்தியாவின் இரண்டுவது சுதந்திர போராட்டத்திற்காக இந்த பொதுக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே அனைவரின் சிந்தனையும், அதற்காகத்தான் இங்கு கூடியிருக்கிறோம். இந்த பேரணியின் நோக்கமும் அதுதான். எதிரியே இல்லை என கூறி வந்த மோடி அண்மையில் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கிறார். நாம் ஒன்று சேர்ந்திருப்பதை பார்த்து நரேந்திர மோடி பயப்படுகிறார். அந்த பயத்தினால் ஏற்பட்ட கோபத்தால் அனைத்து எதிர்க் கட்சிகளையும் விமர்சிக்கிறார் மோடி என பேசியிருந்தார்.

இந்நிலையில், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,

ஒருங்கிணைந்த இந்தியா என சொல்கிறார்கள். என்னைக் கேட்டால் உருக்குலைந்த கூட்டணி என சொல்வேன். உருப்பெற முடியாத கூட்டணி, கருவிலேயே கலைந்துபோகக்கூடிய கூட்டணி. அவ்வளவு பேர் மேடையில் உள்ளார்களே அவர்களிடம் யார் பிரதமர் வேட்பாளர் என்ற ஒரே ஒரு கேள்வியை கேளுங்கள். அதற்கு பதிலிருக்கிறதா? இந்த ஒற்றை கேள்விக்கு பதிலுள்ளதா என கூறினார்.

மேலும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருக்குலைந்து போகும், ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன், நீங்களா, நாங்களா என ஒரு கை பார்த்துவிடுவோம் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க